சகல விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் அங்கத்தவர்கள் மற்றும் முன்னாள் அங்கத்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

கடந்த ஒருவருடத்திற்கு மேலாக கழக செயற்பாடுகள், பொதுக் கூட்டங்கள் மற்றும் கழக நிகழ்வுகளில் கலந்துகொள்ளாத அங்கத்தவர்களை மீண்டும் கழகத்துடன் இணைந்து செயற்படுவதற்கும் அவரின் விலகல் தொடர்பாக விளக்கம் தரவிரும்பின் அதற்குரிய காரணத்தினை எழுத்துமூலமாக தெரிவிப்பதற்கும் எதிர்வரும் 30-09-2020 வரையில் தவணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த தினம் வரையில் எமக்கு எழுத்து மூலமாக தெரியப்படுத்தாத அங்கத்தவர்கள் அனைவரும் கழகத்தில் இருந்து தாமாக விலகிய அங்கத்தவர்கள் என்று கருதப்படுவார்கள். மேலும் அவர்கள் கழகத்தில் இணைவது எனில், அவர்களிற்கு புதிய அங்கத்துவ இலக்கம் மற்றும் மீண்டும் இணையும் திகதியே அவர்கள் கழகத்தில் இணைத்த திகதியாக கருதப்படும் என்றும் அறிவித்துக்கொள்கிறேன்.

செயலாளர் : வைஷ்னவன்
மேலதிக தொடர்புகளுக்கு: எங்கள் முகப்புத்தக Messenger இனை தொடர்புகொள்ளவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *