RUNNERS UP

வட்டுக்கோட்டை கற்பகச்சோலை இளைய நட்சத்திர விளையாட்டுக்கழகம் நடாத்திய 23 வயதினரிற்கான மென்பந்து சுற்றுத்தொடரில் 8 அணிகள் பங்கேற்றன; முதலில் சுழிபுரம் நியூ ஸ்ரார் விளையாட்டுக்கழகத்துடன் எமது அணி மோதியது.
MVSC 46/5(5)
SNS 33/6(4.3)
இப் போட்டியில் எமது அணி 13 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
அடுத்த கட்ட போட்டியில்
MVSC :- 52/4(5)
VBSC:- 45/5(5)

வடக்கம்பிராய் போய்ஸ் அணியினருடன் மோதி 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றது
இறுதிப்போட்டி சுழிபுரம் ஸ்ரார் போய்ஸ் அணியுடன் நடைபெற்றது.
MVSC:-49/5(5)
SSB :- 50/4(4.3)

அதிலே முதலில் துடுப்பெடுத்தாடிய எமது அணி முதலில் சிவதர்சன் மற்றும் டிலக்சன் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தினார்கள்.இறுதியில் எதிரணியின் இடை ஓவரில் எமது அணியின் விக்கெட்டுகள் விழ 5 ஓவர்கள் முடிவில் 49 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. எதிரணியின் சந்தர்ப்பங்கள் தவறவிட இறுதியாக எதிரணி வெற்றியீட்டிக்கொண்டது.
அவ் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

(கஜன்,அபிஸ்ரன்,டிலக்சன் மற்றும் சிவதர்சன் அவர்கள் சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தினார்கள்.)
எமது அணியினரும் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தினர் அவர்களுக்கும் எமது கழகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *