VPL -2020

நடந்து முடிந்த லீக் சுற்றின் அடிப்படையில் முதல் 4 போட்டிகளில் தலா 3 போட்டிகளில் வெற்றியீட்டிய விநாயகர் சூப்பர் ஹீரோஸ் மற்றும் விநாயகர் சூப்பர் ஸ்டார்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற விநாயகர் சூப்பர் ஹீரோஸ் அணியினர் முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்திருந்தனர். அதன் அடிப்படையில் 8 ஓவர் நிறைவில் விநாயகர் சூப்பர் ஸ்டார்ஸ் அணியினர் நகுலகுமார் (13) மற்றும் விஷ்ணுவர்தனின் (10) உதவியுடன் 4 இலக்குகளை இழந்து 45 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. மேலும் விநாயகர் சூப்பர் ஹீரோஸ் அணி சார்பாக புகழேந்திராசா 2 ஓவர்களுக்கு 8 ஓட்ட்ங்களை விட்டுக் கொடுத்து 3 இலக்குகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விநாயகர் சூப்பர் ஹீரோஸ் அணியினர் அணித் தலைவர் சதுர்ஜனின் பொறுப்புமிக்க துடுப்பாட்டத்தினால் (19) 8 ஓவர் நிறைவில் 45 ஓட்டங்களை 5 இலக்குகளை இழந்து பெற்றுக்கொண்டனர்.
போட்டி சமநிலையில் முடிவுற்றதையடுத்து சூப்பர் ஓவரில் விநாயகர் சூப்பர் ஸ்டார்ஸ் அணியினர் கஜமுகனின் அதிரடி ஆட்டத்தினால் 16 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விநாயகர் சூப்பர் ஹீரோஸ் 6 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதனால் விநாயகர் சூப்பர் ஸ்டார்ஸ் அணியினர் VPL -2020 இன் வெற்றிவீரர்களாக தேர்வானார்கள்
போட்டி தொடரின் சிறந்த அணி வீரர்களுக்கான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
விநாயகர் வின்னிங் ஸ்டார்ஸ் சார்பாக
சிறந்த துடுப்பாட்ட வீரர்- பகிகரன்
சிறந்த பந்துவீச்சாளர் – சிவதர்சன்
விநாயகர் சூப்பர் ஹீரோஸ் சார்பாக
சிறந்த துடுப்பாட்ட வீரர்- சதுர்ஜன்
சிறந்த பந்துவீச்சாளர் – பிரியன்
விநாயகர் சூப்பர் ஸ்டார்ஸ் சார்பாக
சிறந்த துடுப்பாட்ட வீரர்- கஜமுகன்
சிறந்த பந்துவீச்சாளர் – விஷ்ணுவர்த்தன்
போட்டி தொடரின் சிறந்த அணி வீரர்களுக்கான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீரர் – பிரகாஷ்
அதிகூடிய இலக்குகளை பெற்ற வீரர் – புகழேந்திரரசா
சிறந்த சகலதுறை வீரர்- பிரகாஷ்
இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் – கஜமுகன்
மற்றும் வெற்றிபெற்ற விநாயகர் சூப்பர் ஸ்டார்ஸ் அணி வீரர்கள் அனைவருக்கும் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *