துடுப்பாட்ட சுற்றுத்தொடர்

நேற்றையதினம் சண்டிலிப்பாய் பிரதேச சபை உட்பட்ட விளையாட்டு கழகங்களிற்கிடையே துடுப்பாட்ட சுற்றுத்தொடர் இடம்பெற்றது. எமது அணி பிரகாஷ் தலைமையில் சுதுமலை அம்பாள் விளையாட்டு கழகத்துடன் முதலில் எதிர் கொண்டது. ஆரம்பத்தில் அதரடி காட்டிய எதிர் அணியினர் பின்னர் வந்த கஜன்,புகழேந்தி மற்றும் நகுலன் ஆகியோரின் சிறந்த பந்து பரிமாற்றங்களில் டனுயன்,நகுலன் மற்றும் டிலக்சன் சிறந்த பிடியெடுப்புகளின் மூலம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 73/10(8) ஓட்டங்களை பெற்றது.துடுப்பாட்டத்திலே நிறோ மற்றும் கஜன் ஆகியோரின் அதிரடியான துடுப்பாட்டத்தில் 6 ஒவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு எமது அணி வெற்றி பெற்றது.தொடர்ச்சியாக இடம்பெற்ற அரை இறுதியில் மானிப்பாய் பிறைற்றை எதிர்கொண்டது.அதிலே ஆரம்பத்தில் எமது அணி துடுப்பெடுத்தாடியது. ஆரம்பத்தில் ஆறுதலாக விளையாடினாலும் இறுதி 2 ஓவர்களில் நிறோவின் அதிரடியில் 32 ஒட்டங்களை அடித்து 6 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 52 ஓட்டங்களைப் பெற்றது.

முதல் ஓவரில் எமது அணியினர் தடுமாறிய போதும் பின்னர் வந்த கஜனின் பந்து பரிமாற்றத்தில் எதிரணியை ஆட்டம் காணவைத்து கடுமையாக போராடி 4.5 ஓவர்களில் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை நழுவ விட்டார்கள்.எனினும் சிறப்பாக விளையாடிய எமது அணி வீரர்களிற்கு வாழ்த்துக்கள்இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற மானிப்பாய் பிறைற்கும் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *