2வது நிர்வாக கூட்டத்தில் கலந்தாலோசித்த முக்கிய விடயங்கள்

நேற்றைய நிர்வாக கூட்டமானது மாலை 6:40 மணியளவில் எமது கழக உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாக அங்கத்தவர்கள் மற்றும் கழக அங்கத்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

நிர்வாக கூட்டத்தில் அங்கத்தவர்களின் சம்மதத்துடன் கீழ்வரும் நபர்களின் அங்கத்துவம் கோரிய விண்ணப்படிவம் அங்கீகரிக்கப்பட்டது
1. க. கஜீபன்
2. ஜோ.அபிஷ்டன்
3. உ. லோஜிதன்
4. இ. தனுஷன்
5. ஜெயக்குமார்
6. நிஜந்தகுமார்
7. அனுஜன்
8. கிருஷ்ணரூபன்
9. அனோஜன்
10. குமரன்
11. மதீசன்

கலந்தாலோசிக்கப்பட்ட முக்கிய விடயங்கள்

  1.  கழக வளர்ச்சி பற்றியும், கணக்கறிக்கை தொடர்பாகவும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
  2. போசகர் திரு. ஐங்கரன் ஆல் செயற்பாடுகளை ஆவணப்படுத்தல் மற்றும் கழக ஒற்றுமை பற்றி வலியுறுத்தப் பட்டது
  3. இயக்கமற்ற உறுப்பினர்களை மீள பதிய நினைவூட்டிடல் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
  4. கழக யாப்பு திருத்த வேண்டிய அவசியம் பற்றி தலைவரால் எடுத்து கூறப்பட்டது.
  5. அங்கத்துவ அடையாள அட்டை முறையினை அறிமுகப்படுத்தல்
  6. கழகத்திற்கு வருமானம் ஈட்டக் கூடிய வழிமுறைகள்
  7. வீரா மென்பந்து சுற்றுத்தொடர்
  8. கிரிக்கட் போட்டிகள் தொடர்பான அங்கத்தவர்களின் கருத்துக்கள்

 

You May Also Like