கடந்த நிர்வாக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட முக்கிய விடயங்கள்

கீழ் வரும் முக்கிய தீர்மானங்கள் கடந்த நிர்வாக குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது

1. வீரா மென்பந்து சுற்றுத்தொடரினை எதிர்வரும் அக்டோபர் மாத இறுதியில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது
2. கழக அங்கத்தவர்களின் சந்தா பணத்தினை, அதற்கு இணையான பெறுமதி கொண்ட வேலைகள் மூலமாகவும் செலுத்தப்படலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
3. விளையாட்டு அறிக்கைகள் விரிவாகவும், வீரர்களின் திறனை பகுப்பாய்வு செய்யும் விதமாகவும் இருக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது
4. மேலும் நிர்வாக கட்டமைப்புக்குறிய கீழ்வரும் உப குழுக்கள் இயங்குவதற்கு நிர்வாக குழு அங்கீகாரம் வழங்கியதுடன், பொதுக் கூட்டம் ஒன்றின் மூலம் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனவும் , அத்துடன் பொதுக் கூட்டத்திலே அதற்குரிய அங்கத்தவர் நியமிக்கப்படுவார்கள் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
5. மேலும் கழகத்தில் அங்கத்துவம் பெற்று, கடந்த ஒருவருடமாக கழகத்தில் இணைந்து செயலாற்றாத அங்கத்தவர்கள் மீண்டும் இணைவதற்குரிய இறுதி திகதியாக 30/09/2020 வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு உரிய முறையில் இதனை கடிதம் மூலம் தெரியப்படுத்த பிரகாஷ் மற்றும் கஜமுகன் நியமிக்கப்பட்டனர்
6. அங்கத்தவர்கள் உயிர்ப்புடன் செயற்படும் அங்கத்தவர்கள், கௌரவ அங்கத்தவர்கள், வெளிநாட்டில் உள்ள கழக அங்கத்தவர்கள் மற்றும் விலகிய அங்கத்தவர்கள் என்றும் அடுத்துவரும் நிர்வாக கூட்டத்தில் பட்டியலிட தீர்மானிக்கப்பட்டது
7. புதிய அங்கத்துவ அடையாள அட்டை அறிமுகப்படுத்தப் பட்டது. அந்த அட்டையானது அடுத்துவரும் நிர்வாக கூட்டத்தின் பின்னர் உயிர்ப்புடன் செயற்படும் அங்கத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்
8. குடிநீர் தொடர்பான வியாபார முதலீடு தொடர்பில் மீண்டும் ஆராய்வது என தீர்மானிக்கப்பட்டது
9.கழகத்திற்கு உதவிகளை புரிந்துவரும் குகரவீந்திரன் ஐயா அவர்களை கௌரவ உறுப்பினராக இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப் பட்டதுடன், அவரின் அங்கத்துவ காலம் ஆனது எங்கள் நிர்வாக குழு வின் அங்கத்துவ காலம் வரையாக தீர்மானிக்கப்பட்டது

You May Also Like